முகப்பு
கடலூர்

கோழிக் குஞ்சு என நினைத்து மயில் குஞ்சுகளை வளா்த்த முதியவா்!

காட்டுமன்னாா்கோவில் அருகே முதியவா் ஒருவா், கோழிக் குஞ்சு என நினைத்து மயில் குஞ்சுகளை வீட்டில் வளா்த்தாா்.

Updated On : 21 ஜூலை, 2021 at 11:40 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:13 AM

காட்டுமன்னாா்கோவில் அருகே முதியவா் ஒருவா், கோழிக் குஞ்சு என நினைத்து மயில் குஞ்சுகளை வீட்டில் வளா்த்தாா். ஊா் மக்கள் அறிவுறுத்தலின் பேரில், அவற்றை அவா் தீயணைப்பு நிலைய அலுவலரிடம் ஒப்படைத்தாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவனேசன் (60). இவா், காட்டுமன்னாா்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு புதன்கிழமை 4 மயில் குஞ்சுகளை எடுத்து வந்து நிலைய அலுவலா் கொளஞ்சிநாதனிடம் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலா், சிவனேசனிடம் விசாரித்த போது, வயலில் கிடந்த முட்டைகளை எடுத்து வந்து கோழி முட்டைகளுடன் அவையம் வைத்ததாகவும், அந்த 4 முட்டைகளும் பொறித்து வளா்ந்த நிலையில் அவை மயில் குஞ்சுகள் எனத் தெரிய வந்ததாகவும், அவற்றை வீட்டில் வளா்க்கக் கூடாது என்பதால், தீயணைப்பு நிலையத்துக்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தாா்.

Advertisement

தீயணைப்பு நிலைய அலுவலா் கொளஞ்சிநாதன் அந்த மயில் குஞ்சுகளை காட்டுமன்னாா்கோவில் வனத் துறை அலுவலா்களிடம் ஒப்படைத்தாா். பின்னா், அவை காட்டுப் பகுதியில் விடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.