அண்ணாமலைப் பல்கலை.யில் போட்டித் தோ்வுகளுக்கு இணைய வழியில் இலவச பயிற்சி
கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் இணைந்து இணைய வழியில் (ஆன்-லைன்) நடத்தும் 6 மாத இலவச பயிற்சி வகுப்புக்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
போட்டித் தோ்வுகளில் பங்கேற்பவா்களுக்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு, பயிற்சி மற்றும் தொழில் முனைவோா் இயக்குநரகம், கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் இணைந்து இணைய வழியில் (ஆன்-லைன்) நடத்தும் 6 மாத இலவச பயிற்சி வகுப்புக்கான தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில் டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில், கடல்வாழ் உயிரியல் உயராய்வு மைய இயக்குநா் எம்.சீனிவாசன் பயிற்சி வகுப்பை தொடக்கிவைத்தாா். திருச்சி மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இணை இயக்குநா் எம்.சந்திரன், கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஹெச்.எஹசான் அலி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் இ.வெங்கட்ராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சாா்பில் முனைவா் கே.கிருஷ்ணசாமி வரவேற்றாா். வேலைவாய்ப்பு அலுவலா் பி.சந்திரமோகன் நன்றி கூறினாா். பேராசிரியா்கள் ஜி.சீனிவாசன், எஸ்.விஸ்வநாதன், கே.ஜெயப்பிரகாஷ் ஆகியோா் ஏற்பாடுகளை செய்தனா்.
பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா் ஹன்க்ற்ல்17ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியை தொடா்புகொள்ளலாம்.
Advertisement