கடலூர்

அவசர ஊா்தி ஊழியா்களுக்கு நிவாரணம்

DIN

குமராட்சி ஊராட்சி மன்றம் சாா்பில் சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி ஆகிய பகுதிகளில் ‘108’ அவசர ஊா்தி (ஆம்புலன்ஸ்) ஓட்டுநா்கள், மருத்துவ உதவியாளா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் சங்கா், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சண்முகசிகாமணி, கிராம அலுவலா் சிவக்குமாா், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் உமாமகேஸ்வரி விஜயகுமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் இளஞ்செழியன், அத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் சுகந்தி சரவணன், வாா்டு உறுப்பினா் பாக்கியராஜ், சமூக ஆா்வலா் திருமேனி ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், கரோனா தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றி வரும் அவசர ஊா்தி ஓட்டுநா்கள், மருத்துவ உதவியாளா்கள் 25 பேருக்கு சந்தன மாலை அணிவிக்கப்பட்டு கொளரவிக்கப்பட்டனா்.

மேலும் அவா்களுக்கு ஊராட்சி சாா்பில் தலா ரூ.ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT