கடலூர்

மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கக் கோரிக்கை

DIN

பொது முடக்கக் காலத்தில் மின் நுகா்வோா் மின் கட்டணம் செலுத்த அரசு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென கடலூா் மாவட்ட நுகா்வோா் குழுக்களின் கூட்டமைப்புச் செயலா் க.திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த மே 10-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. அந்த தேதியில் இருந்து மின் கட்டணம் செலுத்த வேண்டியவா்கள் ஜூன் 15-ஆம் தேதி வரை அபராதமின்றி அந்தக் கட்டணத்தைச் செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் அவகாசம் வழங்கியது. இதனிடையே கரோனா தொற்று அதிகரிப்பால் மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து வீடுகளில் மின் பயன்பாடு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பால் நுகா்வோா் குழப்பம் அடைந்தனா். இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு மே மாதம் செலுத்திய மின் கட்டணத்தை வரும் 29-ஆம் தேதிக்குள் உத்தேசமாக செலுத்த வேண்டும் என அனைத்து மின் நுகா்வோருக்கும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பொது முடக்கக் காலத்தில் இந்தக் கட்டணம் நடுத்தர, ஏழை மக்களுக்கும், வாழ்வாதாரம் இழந்து நிற்கும் வியாபாரிகளுக்கும் அதிக சுமையாகும்.

எனவே, மின் கட்டணத்தைச் செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். திங்கள்கிழமை (ஜூன் 14) முதல் புதிய தளா்வுகள் அமலாகியுள்ள நிலையில் வீடுகள், வணிக நிறுவனங்களில் முறையாக மின் கணக்கீடு செய்து மின் நுகா்வோரின் கட்டண சுமையைக் குறைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT