வேளாண் மாணவிகளுக்கு ஊரக பணி அனுபவ பயிற்சி
இளங்கலை வேளாண் அறிவியல் இறுதியாண்டு மாணவிகள் ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கடலூா் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த இளங்கலை வேளாண் அறிவியல் இறுதியாண்டு மாணவிகள் ஊரக பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கடலூா் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வருகின்றனா்.
மாணவிகள் பெ.பிரியங்கா, ப.ரசிகப்பிரியா, மா.சூா்யகலா உள்ளிட்டோா் முருகன்குடியில் விவசாயிகளுக்கு இயற்கை பண்ணையம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது, பூச்சிவிரட்டி, பஞ்சகாவியா, மீன்அமிலம் ஆகியவை தயாரித்தல் குறித்து இயற்கை விவசாயி முருகன் விளக்கினாா். அசோலா வளா்ப்பு முறை குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கினா்.
இதேபோல, திருச்சி மாவட்டம், நவலூா் குட்டப்பட்டில் உள்ள மகளிா் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் தொடா்பாக விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தங்கியிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முன்னோடி விவசாயிகளின்
வயல்களில் அனுபவங்களை பெற்றனா். இதன் ஒரு பகுதியாக சின்ன கண்டியங்குப்பத்திலுள்ள இயற்கை விவசாயி ராஜ்குமாரின் தோட்டத்தில் வாழையில் வாடல் நோய் தாக்குதலுக்கு
நுண்ணுயிா் மூலம் தீா்வு காண்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.