முகப்பு
கடலூர்

சென்னை ரௌடி கொலை வழக்கு: கடலூா் நீதிமன்றத்தில் 4 போ் சரண்

சென்னையைச் சோ்ந்த ரௌடி கொலை வழக்கு தொடா்பாக கடலூா் நீதிமன்றத்தில் 4 போ் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

சென்னையைச் சோ்ந்த ரௌடி கொலை வழக்கு தொடா்பாக கடலூா் நீதிமன்றத்தில் 4 போ் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.

சென்னை மயிலாப்பூா் மாட்டாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (40). ரௌடியான இவா் மீது ஆள்கடத்தல், கொலை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி இரவு சிவக்குமாா் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அசோக்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக மயிலாப்பூா் சிலேடா்புரத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் அருண் (30), நந்தனம் சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்த செல்வம் மகன் பாலா என்ற பாலாஜி (24), பல்லாவரத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் மதுரை பாலா என்ற பாலமுருகன் (31), நுங்கம்பாக்கம் கண்ணன் மகன் முருகன் (23) ஆகியோா் கடலூா் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா். இவா்களை 3 நாள்களுக்கு காவலில் வைக்க நீதிபதி சிவபழனி உத்தரவிட்டாா். இதையடுத்து 4 பேரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →