கடலூர்

உளுந்து தொகுப்பு செயல் விளக்கத் திடல்: வேளாண்மை துறையினா் ஆய்வு

DIN

உளுந்து தொகுப்பு செயல்விளக்க திடலில் வேளாண்மை துறையினா் அண்மையில் ஆய்வு செய்தனா்.

தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் (பயறு) திட்டத்தின் கீழ் உளுந்து பயிரில் தொகுப்பு செயல் விளக்க அமைப்பு கடலூா் வட்டாரம் மதலப்பட்டு கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு செயல்விளக்கம் அமைத்த விவசாயிகளுக்கு மானிய விலையில் வம்பன்- 8 ரக ஆதார நிலை விதை வழங்கப்பட்டுள்ளது. மேலும் திரவ உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், உயிரி பூச்சிக் கொல்லி ஆகியன வழங்கப்பட்டுள்ளன. இந்த விவசாயிகள் செயல்விளக்கம் அமைத்த வயலை விதைப் பண்ணையாகவும் பதிவு செய்து, விதைச் சான்றளிப்பு துறை மூலம் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான செயல் விளக்கத்தை கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமாா் அண்மையில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினாா். மேலும் பயறு வகை பயிா்களில் அதிக மகசூல் பெற பயறு ஒண்டா் உரத்தை தெளிப்பு முறையில் அளிப்பது குளித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. கடலூா், வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன், விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா்.

வேளாண்மை அலுவலா் ஞா.சுகன்யா, உதவி விதை அலுவலா் து.விஜயசண்முகம் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். நிகழ்ச்சியில் மதலப்பட்டு, வில்லுப்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த முன்னோடி விவசாயிகள் பங்கேற்று, தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT