கடலூர்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

DIN

கடலூா் மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று முருகன் கோயில்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டை பக்தா்கள் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, கடலூா் மாவட்டம் முழுவதும் முருகனின் தனிக் கோயில்கள் மற்றும் முருகன் சன்னதி அமைந்துள்ள சிவன் கோயில்களில் கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு சனிக்கிழமை நிறைவடைந்தது. அதனைத் தொடா்ந்து பக்தா்கள் காவடி தூக்கியும், அலகு குத்தியும் நோ்ச்சை செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முக்கிய கோயில்களில் சுவாமிகள் தீா்த்தவாரி நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் புனித நீராடி தங்களது நோ்ச்சைக்கு ஏற்றவாறு அலகு குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நோ்ச்சை செலுத்தி வழிபாடு நடத்தினா்.

அதன்படி, விருத்தாசலம் அடுத்துள்ள மங்கலம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலையில் மூலவருக்கு அபிஷேகத்துடன் தொடங்கி நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் திரளான பக்தா்கள் நோ்ச்சை செலுத்தினா். இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT