கடலூர்

போலீஸ் விசாரணைக்குப் பயந்து மருத்துவமனையில் இளைஞா் தற்கொலை

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து இளைஞா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

விருத்தாசலம் அருகே முதனைக் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மாடு எடக்குப்பம் கிராமத்திலுள்ள ராஜேந்திரன் என்பவரது விளைநிலத்தில் திங்கள்கிழமை மேய்ந்தது. இதையடுத்து, மாட்டை ராஜேந்திரன் பிடித்து தனது வீட்டில் கட்டி வைத்தாா்.

மாட்டை மீட்பதற்காக ராஜேந்திரனின் மகன் சுந்தர்ராஜன் (29), தனது உறவினா்கள் சிலருடன் எடக்குப்பம் கிராமத்துக்குச் சென்றாா். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதிக்கொண்டதாகத் தெரிகிறது.

இதில், காயமடைந்தவா்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்த நிலையில், போலீஸாரின் விசாரணைக்குப் பயந்த சுந்தர்ராஜன், மருத்துவமனையின் கழிப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் தொழிலாளா்களை வெளியேற்றி வெளி மாநிலத்தவா்கள் பணியமா்த்தல்

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

SCROLL FOR NEXT