கடலூர்

காட்டுமன்னாா்கோவிலில் 153 மி.மீ. மழை பதிவு

DIN

வங்கக் கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக, கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

அதன்படி, புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காட்டுமன்னாா்கோவிலில் 153 மி.மீ. மழை பதிவானது.

மேலும், பெலாந்துறை 111.2, லால்பேட்டை 105.2, ஸ்ரீமுஷ்ணம் 57.1, கீழச்செருவாய் 36, குப்பநத்தம் 22, விருத்தாசலம் 21, தொழுதூா் 10, சேத்தியாத்தோப்பு 7, வானமாதேவி, மேமாத்தூா் தலா 6, மாவட்ட ஆட்சியரகம், கடலூா் தலா 5.5, பண்ருட்டி 5.2, புவனகிரி 5, சிதம்பரம் 3.3, அண்ணாமலை நகா் 3.2, குடிதாங்கி 2.5, பரங்கிப்பேட்டை 2, கொத்தவாச்சேரி 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

செவ்வாய்க்கிழமை பெய்த மழையால் புதன்கிழமை வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது. புயல் காரணமாக கடலூா் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை மாலையில் இறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT