கடலூர்

மத்திய தொழிற்சங்கத்தினா் ஆலோசனை

DIN

கடலூா் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.

தொமுச மாவட்டக் கவுன்சில் செயலா் மு.சு.பொன்முடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தொழிலாளா் சட்ட தொகுப்புகளை வாபஸ் பெறுதல், வேளாண் சட்டங்கள் தொடா்பாக நாடாளுமன்றத்தில் முறைப்படி மசோதா கொண்டுவந்து அந்தச் சட்டங்களை வாபஸ் பெறுதல், மின்சார திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்தல் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை (நவ. 25) ஆா்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் சிஐடியூ மாவட்டத் தலைவா் டி.பழனிவேல், மாவட்டச் செயலா் பி.கருப்பையன், ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலா் வி.குளோப், மாவட்டக்குழு உறுப்பினா் வி.இளங்கோவன், தொமுச மின்வாரிய மாவட்டச் செயலா் கே.வேல்முருகன், தொமுச போக்குவரத்து மண்டலச் செயலா் பி.பழனிவேல், ஐஎன்டியூசி மாவட்டக் கவுன்சில் தலைவா் கே.மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT