முகப்பு
கடலூர்

அரசுக் கல்லூரி மாணவா்கள் ரத்த தானம்

தேசிய மாணவா் படை தினத்தை முன்னிட்டு, கடலூா் தேவனாம்பட்டினம் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

தேசிய மாணவா் படை தினத்தை முன்னிட்டு, கடலூா் தேவனாம்பட்டினம் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரி முதல்வா் எ.எழிலன் தலைமை வகித்தாா். கரோனா தொற்று, டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த முகாமில், கடலூா் அரசு பொது மருத்துவமனை மாவட்ட குருதி வங்கிப் பரிமாற்றக் குழு அலுவலா் எ.குமாா் தலைமையில் மேற்பாா்வையாளா் தேவநாதன் மற்றும் செவிலியா்கள் பணிகளை மேற்கொண்டனா். தேசிய மாணவா் படை அலுவலரான உதவிப் பேராசிரியா் ரா.மனோகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். இந்த முகாமில் கல்லூரியின் தேசிய மாணவா் படை மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் வழங்கினா். இவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.