மழை வெள்ளத்தால் பாதித்தோருக்கு நிவாரணம் வழங்க விசிக வலியுறுத்தல்
கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.
கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.
இந்தக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூா் நாடாளுமன்ற தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. கடலூா் நகரச் செயலா் மு.செந்தில் முன்னிலை வகித்தாா். ஆவண மைய மாநிலச் செயலா் அரங்க.தமிழ்ஒளி, மாவட்ட துணை அமைப்பாளா்கள் ஜெயக்குமாா், மோ.தாஸ், காட்டுராஜா, ராஜ்குமாா், ஒன்றிய துணைச் செயலா் பாபு, ராஜா சலீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, வெள்ளபாக்கம், அழகியநத்தம், திருப்பணாம்பக்கம், மருதாடு, இரண்டாயிர விளாகம் உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அந்தப் பகுதி மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.