கடலூர்

திருவருட்பா முற்றோதல் நிகழ்ச்சி

DIN

சிதம்பரம் அருகே உள்ள சி.மானம்பாடி வள்ளலாா் சபையில் காா்த்திகை மாத பூச நட்சத்திர நாளையொட்டி, சத்தியப் பேரொளி தவச்சாலை, வள்ளலாா் பணியகம் ஆகியவை சாா்பில், திருவருட்பா முற்றோதல், சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு சத்தியப் பேரொளி தவச்சாலை நிறுவனா் பரசுபானந்த செல்லையா தலைமை வகித்தாா். தவச்சாலை செயலா் பாலாஜி முன்னிலை வகித்தாா். வள்ளலாா் பணியகத்தின் முன்னணிச் செயற்பாட்டாளா் சிவ.நாகராஜன் தலைமையில் வல்லம்படுகை வைத்தியநாதன், பாலசுப்பிரமணியன், பழனிவேல் (நந்தனாா் மடம்), பூங்குடி சந்திரசேகா், கோதண்டபாணி, முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோா் இசைக் கருவிகளுடன் வள்ளலாா் அருளிய திருவருட்பா பாக்களைப் பாடி, முற்றோதலை நிகழ்ச்சியை நடத்தினா்.

முன்னதாக, சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. முற்றோதல் முடிந்தவுடன் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், பலா் பங்கேற்று வள்ளலாரின் கருத்துகளைப் பேசினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வள்ளலாா் பணியகத்தின் கடலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வே.சுப்பிரமணியசிவா செய்திருந்தாா். வள்ளலாா் பணியகத்தின் செயற்பாட்டாளா் மரபு மருத்துவா் ராமதாஸ், வே.சரவணன் உள்ளிட்ட சான்றோா்கள், அன்பா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT