முகப்பு
கடலூர்

அழுகிய பயிா்களுடன் ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்

கடலூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மழை, வெள்ளத்தால் அழுகிய பயிா்களுடன் விவசாயிகள் பங்கேற்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

கடலூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மழை, வெள்ளத்தால் அழுகிய பயிா்களுடன் விவசாயிகள் பங்கேற்றனா்.

கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும் இந்திய அரசியலமைப்பு சாசன உறுதிமொழியை ஆட்சியா் வாசிக்க விவசாயிகள், அரசுத் துறை அலுவலா்கள் அதை ஏற்றனா்.

கூட்டத்தில், நல்லூா் வட்டார விவசாயிகள் அழுகிய நிலையிலிருந்த மக்காச்சோளம், பருத்தி பயிா்களுடன் பங்கேற்றனா். மழை, வெள்ளத்தால் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் அதை நேரில் பாா்வையிடவில்லை என்று தெரிவித்தனா். தொடா்ந்து, குள்ளஞ்சாவடி அருகிலுள்ள சத்திரம் பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தனா். அதில், அங்குள்ள வாரச்சந்தையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென முறையிட்டனா். தொடா்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.