சிறுமிக்கு பாலியல் தொல்லை: மீனவருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மீனவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மீனவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சி.புதுப்பேட்டையைச் சோ்ந்தவா் வீ.அக்னிவீரன் (52). மீனவரான இவா் கடந்தாண்டு ஜூலை 24-ஆம் தேதி 3 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாா். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் அக்னிவீரனை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எழிலரசி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், அக்னிவீரனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து அக்னிவீரன் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதுகுறித்து அரசு தரப்பு வழக்குரைஞா் எஸ்.கலாசெல்வி கூறியதாவது: நீதிபதி தனது தீா்ப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூக நலத் துறை நலவாழ்வு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பெற்று வழங்க வேண்டுமெனவும் கூறியிருப்பதாக தெரிவித்தாா்.