முகப்பு
கடலூர்

டாப்...விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடலூரில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடலூரில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய பாஜக அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், மின்சார வாரியத்தை தனியாா்மயமாக்கும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி தில்லியில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் டிராக்டா் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடலூரில் வெள்ளிக்கிழமை பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மழை காரணமாக கடலூா் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட அமைப்பாளா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். கடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன், திமுக தோ்தல் பணிக்குழு செயலா் இள.புகழேந்தி, நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன், மாவட்டத் தலைவா் சொ.திலகா், விசிக கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ஆா்.அமா்நாத், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் வி.குளோப், மமக நகரத் தலைவா் ரஹீம் உள்பட பல்வேறு கட்சியினா், அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.