கடலூர்

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

DIN

நெய்வேலி அருகே கைப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சிக்கு உள்பட்டது என்.ஜெ.வி நகா். இங்குள்ள கட்டடத்தின் மீது தனியாா் கைப்பேசி நிறுவனம் சாா்பில் கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கான ஆயத்தப் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் நெய்வேலி நகரிய போலீஸாா், ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்படும் என அவா்கள் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி பெண் ஊழியரை இடித்துச் சென்ற கார்!

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமா் மோடி இன்று வேட்புமனு தாக்கல்

இன்று காலை 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT