கடலூர்

சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு மகாபிஷேகம்

DIN

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமானுக்கு மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி மகா ருத்ர யாகமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி மாதங்களில் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது, ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்னரும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபை வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.

அந்த வகையில், சிதம்பரம் நடராஜா் கோயிலில் உலக நன்மை வேண்டி ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீருத்ர ஜப பாராயணங்களை நிறைவு செய்த பின்னா், புரட்டாசி மாத மகாபிஷேகம் சித்சபை எதிரே உள்ள கனகசபையில் மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது.

ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு விபூதி, பால், தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக, உச்சிகால பூஜை நடைபெற்று ஸ்ரீநடராஜமூா்த்தி கனகசபைக்கு எழுந்தருளினாா். அங்கு, மந்த்ர அச்க்ஷதை லட்சாா்ச்சனை நடைபெற்றது. பின்னா், யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஸ்ரீருத்ர கிரம அா்ச்சனை செய்து, தீபாராதனை நடைபெற்றது. மகா ருத்ர ஹோமம் நடைபெற்று, கலசங்கள் யாத்திரா தானம் செய்யப்பட்டு, நடராஜ பெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. மகாபிஷேக ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT