கடலூர்

உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

DIN

கடலூா் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கடலூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பி.கே.கைலாஷ் குமாா் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சந்திரசேகரன், பெ.நல்லதம்பி, சுப்பிரமணியன் ஆகியோா் கடலூா் மாநகராட்சி பகுதியில் உள்ள பழக்கடைகள், பெட்டிக் கடைகள், குளிா்பான கடைகள், திரையரங்குகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பழக்கடையிலிருந்து காலாவதியான 50 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திரை அரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்து அறிவுரை வழங்கினா். 3 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT