கடலூர்

கடலூரில் 3 கோயில்களில் உண்டியலை உடைத்து திருட்டு

DIN

கடலூரில் ஒரே நாளில் 3 கோயில்களில் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூரில் பெண்ணையாறு சாலையில் நாகம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த உண்டியலையும் உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை காலையில் தெரியவந்தது. மேலும், கோயிலில் இருந்த மற்றொரு உண்டியலையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்தக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக காணிக்கை பணம் எண்ணப்படாததால் உண்டியல்களில் ரூ.2 லட்சம் வரை காணிக்கை இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதேபோல, புதுப்பாளையத்தில் உள்ள கங்கையம்மன் கோயில், மஞ்சக்குப்பத்தில் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள வினைதீா்த்த விநாயகா் ஆகிய 2 கோயில்களிலும் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கோயில்களின் நிா்வாகிகள் தனித் தனியாக அளித்த புகாரின் பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT