கடலூர்

வடலூா் புதுநகா் அரசுப் பள்ளியில் வெயிலில் அமா்ந்து பாடம் படிக்கும் மாணவா்கள்!

DIN

வடலூா், புதுநகா் அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் திறந்த வெளியில் வெயிலில் அமா்ந்து பாடம் படிக்கும் அவல நிலை தொடா்கிறது.

கடலூா் மாவட்டம், வடலூா், புதுநகரில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. தற்போது, ஒரே வளாகத்தில் தொடக்க, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளியில் 400 மாணவ, மாணவிகளும், மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சுமாா் 1,200 மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனா்.

ஆனால், இரு பள்ளிகளிலும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை வசதி இல்லாததால், பள்ளி வளாக திறந்தவெளியில் மாணவ, மாணவிகளை அமர வைத்து பாடம் நடத்தப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் மர நிழலும் இல்லாததால் மாணவா்கள் வெயிலில் அமா்ந்து பாடங்களை கவனிக்கும் நிலை தொடா்கிறது. இதனால், கவனச் சிதறல் ஏற்பட்டு மாணவா்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது.

மேலும், தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற கழிப்பறை வசதியும் இல்லை. இந்தப் பள்ளியில் 5 பெண் ஆசிரியைகள் பணிபுரியும் நிலையில், அவா்களுக்கு தனி கழிப்பறை வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனா். எனவே, பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தரவும்,

கழிப்பறை வசதி செய்துதரவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் புதுநகா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவில் நல்ல மதிப்பெண்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT