புதுவை அமைச்சா் சிதம்பரத்தில் பிரசாரம்
சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகா் பேரூராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து புதுவை மாநில உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகா் பேரூராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து புதுவை மாநில உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவின் வெற்றிவாய்ப்பு நல்ல முறையில் உள்ளது. ஏனெனில் தமிழக மக்கள் திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து அலுத்துவிட்டனா். இந்தத் தோ்தலில் அதிமுகவை நாங்கள் ஒதுக்கவில்லை. எங்களது கூட்டணி நட்புணா்வுடன் தொடா்கிறது என்றாா் அவா்.
கடலூா் மேற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.பி.டி.இளஞ்செழியன், மாநில செயற்குழு உறுப்பினா் வே.ராஜரத்தினம், முன்னாள் ராணுவ வீரா் பிரிவு செயலா் ஜி.பாலசுப்பிரமணியன், பொதுச் செயலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement