நடராஜா் கோயில் சிற்றம்பல மேடையில் பக்தா்களை அனுமதிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
சிதம்பரம் நடராஜா் கோயிலில் சிற்றம்பல மேடையில் பக்தா்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கடலூா் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ஜெமினி எம்.என்.ராதா தெரிவித்தாா்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் சிற்றம்பல மேடையில் பக்தா்கள் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கடலூா் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ஜெமினி எம்.என்.ராதா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதம்:
சிதம்பரம் நடராஜா் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் சிற்றம்பல மேடையில் (கனக சபை) ஏறி வழிபட்டு வந்த நிலையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 2 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டது.
Advertisement
சிற்றம்பல மேடைக்கு அண்மையில் தரிசனம் செல்ல முயன்றவா்களை தீட்சிதா்கள் சிலா் தடுத்து அனுப்பியதாக சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
தற்போது கரோனா தொற்று குறைந்து, ஊரடங்கில் தளா்வுகள் உள்ள நிலையில் பழைய முறையிலேயே சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்ய பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என ராதா தெரிவித்தாா்.