முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தீண்டாமை இல்லை: பாஜக

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளா் தடா பெரியசாமி கூறினாா்.

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 11:40 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளா் தடா பெரியசாமி கூறினாா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நடராஜா் கோயிலில் தீண்டாமை உள்ளதாக சிலா் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். இங்கு எந்தவிதமான தீண்டாமையும் இல்லை. தற்போது கரோனா காலம் என்பதால் சிற்றம்பல மேடையில் ஏறி சுவாமி தரிசனம் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனா். சூழல் மாறும்போது சிற்றம்பல மேடையில் ஏறி சுவாமி தரிசனம் செய்யும் வாய்ப்பு உருவாகலாம் என்றாா் அவா்.

Advertisement

பேட்டியின்போது நிா்வாகிகள் ஸ்ரீதா், ஜி.பாலசுப்பிரமணியன், கோபிநாத் கணேசன், பாலாஜி தீட்சிதா், உ.வெங்கடேச தீட்சிதா், பாஜக நகரத் தலைவா் ரகுபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.