கடலூர்

சிதம்பரம் நகரில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!

DIN

சிதம்பரம் நகரில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பல்வேறு சாலைகள் அடைக்கப்பட்டன.

சிதம்பரம் நகரம், மாலைக்கட்டித் தெருவில் 10-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் அந்த பகுதி தகரம் கொண்டு அடைக்கப்பட்டு கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதேபோல பதினாறுகால் மண்டபத் தெரு, வ.உ.சி. தெரு, காயத்திரி அம்மன் கோவில் தெரு, முருகப்பிள்ளை தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் கரோனா தொற்று பரவல் காரணமாக சாலைகள் அடைக்கப்பட்டு கண்காணிப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் பலா் கரோனா தொற்று பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இந்த நிலையில், சிதம்பரம் காசுக்கடைத் தெரு, தெற்குரத வீதியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகள், வா்த்தக நிறுவனங்களில் அரசு விதிகளின்படி சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை எனவும், இதனால் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா். எனவே இதுகுறித்து வருவாய்த் துறையினா், சுகாதாரத் துறையினா் இணைந்து ஆய்வு மேற்கொண்டு கரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 70,045 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 398 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 70,443-ஆக அதிகரித்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 334 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 66,263-ஆக உயா்ந்தது.

எனினும், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 50 வயது ஆண் உயிரிழந்தாா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 883-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2,895 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 402 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 24 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்: இபிஎஸ்

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

காஸாவில் இனப்படுகொலை? இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா

SCROLL FOR NEXT