விமல்ராஜ் 
கடலூர்

பண்ருட்டி அருகே  விளையாட்டுத் திடலில் கபடி வீரர் மரணம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கபடி விளையாடிய வீரர் விளையாட்டுத் திடலில் உயிரிழந்தார்.

DIN

நெய்வேலி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கபடி விளையாடிய வீரர் விளையாட்டுத் திடலில் உயிரிழந்தார்.

பண்ருட்டி சுற்றுவட்டப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கிரிகெட், கபடி போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தி விளையாடுவது வழக்கம்.

அந்த வகையில், பண்ருட்டி வட்டம் முத்தாண்டிகுப்பம் காவல் சரகம் மானடிக்குப்பம் கிராமத்தில் கபடி போட்டி சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சுற்றுவட்டப் பகுதிகளைச் சேர்ந்த கபடி குழுவினர் பங்கேற்று விளையாடி வந்தனர்.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை கபடி போட்டி தொடங்கியது. இரவு 9.30 மணியளவில் கபடி விளையாட்டின் போது, பெரியபுறங்கனி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகன் கபடி வீரர் சஞ்சய் (எ) விமல்ராஜ்(21) பெரியபுறங்கனி அணியில் விளையாடினார். 

அப்போது எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்கும் முயன்ற போது எதிர்பாராத விதமாக மார்பில் அடிபட்டு சுய நினைவில்லாமல் கிடந்தவரை, அங்கு இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் இறந்துவிட்டதாக  தெரிவித்தனர். 

பின்னர், விமல்ராஜ் உடல் உடல் கூறாய்வுக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து முத்தாண்டி குப்பம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகமதாபாத்தில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

எனது கணவர் கூடைப்பந்து விளையாடுகிறாரா? ஃபிஃபா விருதில் புறக்கணிக்கப்பட்ட ரஃபீனியாவின் மனைவி கேள்வி!

ஜெர்மனியில் கார் ஆலையை பார்வையிட்ட ராகுல்!

எத்தனை பேரு.... ஜெயிலர் - 2 படத்தில் நோரா ஃபதேகி!

உற்பத்தித் துறை, மின்னணு பொருள் ஏற்றுமதியில் அதிரடி காட்டியிருக்கும் அரசு: அமைச்சர் தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT