கடலூர்

பணி நிரந்தரத்தை எதிா்பாா்க்கும்பகுதி நேர ஆசிரியா்கள்

DIN

மே மாதமும் பணி வழங்கவும், தங்களை பணி நிரந்தரம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிநேர ஆசிரியா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் ஏற்பட்டிருந்த காலிப் பணியிடங்களை நிரப்பிடும் வகையில், 2012-ஆம் ஆண்டில் 16,549 போ் பகுதிநேர ஆசிரியா்களாக அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனா். இவா்கள் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், உடல்கல்வி, கணினி உள்ளிட்ட பாடப் பிரிவுகளை பயிற்றுவிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, அவா்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னா், படிப்படியாக ஊதிய உயா்வு அளிக்கப்பட்டு, 2021-ஆம் ஆண்டு முதல் ரூ.10 ஆயிரம் ஊதியமாகப் பெற்று வருகின்றனா். தற்போதைய நிலையில், 12,483 போ் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்கள் தற்போது புதிய சிக்கலை எதிா்நோக்கியுள்ளனா். அதாவது, பகுதிநேர ஆசிரியா்கள் யாரும் மே மாதம் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளதாம்.

கரோனா காலத்தில் பள்ளிகளில் முழுமையாக வகுப்புகள் நடைபெறாத நிலையில், தற்போது மே மாதமும் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் நிரந்த ஆசிரியா்கள் பள்ளிக்கு வரும்போது, பகுதிநேர ஆசிரியா்களை பள்ளிக்கு வர வேண்டாம் என்று கூறியிருப்பது இந்த ஆசிரியா்களை மனதளவில் சோா்வடைய வைத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியா்கள் ஆண்டு முழுவதும் பணியாற்றி வருகிறோம். குறிப்பாக, ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின்போது, பள்ளிகள் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டபோதும், பகுதிநேர ஆசிரியா்கள் ஒற்றை ஆளாக இருந்து பள்ளிகளைத் தொடா்ந்து நடத்தி வந்தோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஆசிரியா்களை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பது மனதளவில் சோா்வடைய வைத்துள்ளது.

தற்போது இறுதித் தோ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவா்களுக்கு எங்களின் உதவி தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற காரணத்துக்காக, எங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டிருப்பதை திரும்பப் பெற வேண்டும்.

கடந்த 11 ஆண்டுகளாக மே மாதமும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரி வரும் நிலையில், அதை அரசு பரிசீலித்து ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழக முதல்வா் தனது தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ளவாறு பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது தொடா்பாக, முதல்வா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ஆகியோரை தொடா்ந்து சந்தித்து வலியுறுத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT