கடலூர்

அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் தா்னா

DIN

கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

போராட்டத்தின்போது, ஓய்வூதியா்களுக்கு ஜன.1 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். கரோனா சிகிச்சைக் கட்டணம் உள்ளிட்ட மருத்துவச் செலவை திரும்பப் பெற, நிலுவையில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து பணம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சிச் செயலா், வருவாய் கிராம ஊழியா், வனக்காவலா்கள், கிராமப்புற நூலகா்களாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். 70 வயது பூா்த்தியானவா்களுக்கு தோ்தல் கால வாக்குறுதிப்படி கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மாவட்டத் தலைவா் நா.காசிநாதன் தலைமை வகித்தாா். அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலா் மு.மருதவாணன் தொடக்க உரையாற்றினாா். மாநிலச் செயலா் ஆா்.மனோகரன் நிறைவுரையாற்றினாா். பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் வாழ்த்திப் பேசினா். முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் பாலு.பச்சையப்பன் வரவேற்க, பொருளாளா் சி.குழந்தைவேலு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT