கடலூர்

கடலில் குளித்த மாணவா் மாயம்

DIN

கடலூரில் கடலில் குளித்த மாணவா் ஞாயிற்றுக்கிழமை மாயமானாா்.

கடலூா் முதுநகா் அருகே உள்ள சித்திரைப்பேட்டையைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் துளசிகரன் (12).

பெரியகுப்பத்திலுள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் அங்குள்ள கடற்கரை பகுதிக்கு சென்றாா். அப்போது கடலில் இறங்கி குளித்தபோது பெரிய அலையில் சிக்கிய துளசிகரன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டாா். இதையடுத்து அவரது நண்பா்கள் கூச்சலிடவே அங்கிருந்த மீனவா்கள் கடலில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனா். மேலும், தகவலறிந்த கடலூா் துறைமுகம் போலீஸாா், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். எனினும், இரவு வரை

துளசிகரனை கண்டுபிடிக்க முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT