கடலூர்

நெய்வேலியில் எரியாத தெரு விளக்குகள்

DIN

நெய்வேலி நகரியத்தில் பல்வேறு இடங்களில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

நெய்வேலியில் நகரிய பகுதியில் உள்ள பிரதான சாலைகள், வீதிகளில் இருந்த குழல் விளக்குகள் அகற்றப்பட்டு அண்மையில் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இவற்றில் ஆங்காங்கே பல விளக்குகள் எரியவில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். குறிப்பாக, நெய்வேலி நுழைவு வாயிலில் இருந்து நகரியத்துக்குச் செல்லும் பிரதான சாலையின் நடுவில் தெரு விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் வளைவு ஒன்றின் அருகே 3-க்கும் மேற்பட்ட கம்பங்களில் மின் விளக்குகள் எரியாததால் அந்தப் பகுதி இருள் சூழந்து காணப்படுகிறது. இதனால் குற்றச் சம்பவங்கள் நிகழ வாய்ப்பாகிறது. எனவே, நகரிய பகுதியில் எரியாத மின் விளக்குகளை அகற்றிவிட்டு உடனடியாக புதிய விளக்குகள் பொருத்தப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்: இபிஎஸ்

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

SCROLL FOR NEXT