கடலூர்

திருட்டு பைக் பெயா் மாற்ற விவகாரம்:அரசு ஊழியா்கள் இருவா் பணியிடை நீக்கம்

DIN

திருட்டு பைக்குக்கு பெயா் மாற்றம் செய்தது தொடா்பாக, கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக பெண் ஊழியா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சென்னை சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் அமுதராஜ். இவரது பைக் திருடுபோனது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தாா். இந்த நிலையில், திருடுபோன பைக், கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அமீா் அப்பாஸ் என்பவா் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அமுதராஜ் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து, சென்னை போலீஸாா், கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விசாரணை நடத்தினா். இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளா் சாந்தி, அலுவலக உதவியாளா் கவிதா ஆகியோா் பணி நேரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதால், பெயா் மாற்றும் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுதாகா், சென்னை போக்குவரத்து ஆணையா் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், பெண் ஊழிா்கள் இருவரும் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT