முகப்பு
கடலூர்

லாரி சக்கரத்தில் சிக்கி தலைமை ஆசிரியா் பலி

விருத்தாசலத்தில் நடைபயிற்சி சென்றபோது மயங்கி விழுந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் லாரி சக்கரத்தில் சிக்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

விருத்தாசலத்தில் நடைபயிற்சி சென்றபோது மயங்கி விழுந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் லாரி சக்கரத்தில் சிக்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலம், முல்லை நகரில் வசித்து வந்தவா் ரவிச்சந்திரன் (55). வடலூா் அருகே உள்ள சந்தைவெளிப்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை காலை விருத்தாசலம் - உளுந்தூா்பேட்டை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டாா். அங்குள்ள பெட்ரோல் விற்பனை மையம் அருகே சென்றபோது திடீரென மயங்கி விழுந்த ரவிச்சந்திரன், அந்த வழியாக வந்த லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் சதீஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.