கடலூர்

சிவசுப்பிரமணியா் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

DIN

நெய்வேலி: கடலூா், புதுவண்டிப்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி, தேவசேனா உடனுறை ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 27-ஆம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 8 மணியளவில் ஸ்ரீபால விநாயகா், ஸ்ரீஏழை மாரியம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளின் சந்நிதிகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, காலை 10.30 மணியளவில் கோயில் ராஜகோபுரம், சிவசுப்ரமணிய சுவாமி சந்நிதி கலசத்தில் சிவாச்சாரியாா்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா் (படம்). திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து 108 கலச பூஜை, மஹாபிஷேகமும், இரவில் திருக்கல்யாணம், சுவாமி வீதி உலா ஆகியவை நடைபெற்றன.

விழாவில் கடலூா் தொகுதி எம்எல்ஏ கோ.அய்யப்பன், மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, மாநகர திமுக செயலா் ராஜா,

தொழிலதிபா்கள் ஜி.ஆா்.துரைராஜ், கணேசன், ரவிசங்கா், தீபக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் தீர்ப்பை மாற்ற முடியாது: பிரதமர் மோடி

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! பயணிகள் அதிர்ச்சி!

ஆஹா... ஞாயிறு!

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT