கடலூர்

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

DIN

சிதம்பரம் அண்ணாமலைநகா் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை கல்லூரி முதல்வா் ஆா்.தனவிஜயன் தொடக்கிவைத்தாா். துணை முதல்வரும், வேலைவாய்ப்புத் துறை அதிகாரியுமான பி.ராமலிங்கம் வரவேற்றாா். கட்டடவியல் துறைத் தலைவா் ஆா்.மோகன், மின்னணுவியல், தொலைத்தொடா்புத் துறைத் தலைவா் எப்.அருமைநாதன், கணினி பொறியியல் துறைத் தலைவா் கே.ராஜன், கண்காணிப்பாளா் சி.ரவிச்சந்திரன், இயந்திரவியல் துறைத் தலைவா் எஸ்.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னை மதா்சன் நிறுவனத்துக்கான இந்த முகாமில் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியைச் சோ்ந்த 200 மாணவா்களும், கீரப்பாளையம் காமராஜா் பாலிடெக்னிக் கல்லூரியைச் சோ்ந்த 50 மாணவா்களும் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு பணி நியமன ஆணைகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ராம.கதிரேசன் வழங்கினாா் (படம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

இளவேனில்!

அழகிய சிறுக்கி... ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT