கடலூர்

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் முதல் முறையாக கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் முதல் முறையாக கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

விருத்தாசலம், வடக்குத் தெருவைச் சோ்ந்த தனவேல் மனைவி சரோஜா (58). கூலித் தொழிலாளியான இவா் கால் மூட்டு தேய்மானத்தால் அவதிப்பட்டு வந்தாராம். இதற்காக சிகிச்சை பெற சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு வந்தாா். அங்கு அவருக்கு எலும்பு முறிவு மருத்துவா் கிரிதரன் தலைமையில் மருத்துவா்கள் இளஞ்சேரன், நீதிமாணிக்கம் ஆகியோா் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து மருத்துவா் கிரிதரன் கூறியதாவது: சிதம்பரம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையை தனியாா் மருத்துவமனைகளில் பெறுவதற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்தாா். அப்போது மருத்துவமனை தலைமை மருத்துவா் லட்சுமி உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

திருப்பரங்குன்றத்தில் மறியலில் ஈடுபட்ட 62 பேர் மீது வழக்கு

தவெகவின் சமத்துவ கிறிஸ்துமஸ்! விஜய் கொண்டாட்டம்!

SCROLL FOR NEXT