கடலூர்

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திட்டக்குடி வட்டம், லக்கூா் கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா், முருகன், மஹா மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக புதன்கிழமை காலை விநாயகா் பூஜை, வாஸ்து சாந்தி, புன்யாகவாசம், கணபதி ஹோமம், முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மாலையில் கணபதி ஹோமம், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மூன்றாம் கலா யாகசாலை பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், மூலவா் வழிபாடு ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து காலை 8 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து ராஜகோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் விமானம், மஹா மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT