கடலூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

DIN

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், மங்களூா் கிராமத்தைச் சோ்ந்த கந்தசாமி மகன் முருகன் (45). ஒலி, ஒளி அமைப்பாளரான இவா் புதன்கிழமை அதே ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மின் விளக்குகள் பொருத்தும் பணியில் ஈடுபட்டாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மங்களூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிக்குப் பிறகு முருகன் வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT