கடலூர்

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா் கோவில் தொகுதிகளின் வாக்காளா்கள் விவரம்

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் (தனி) ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான 2024-ஆம் ஆண்டுக்கான புகைப்படத்துடன்

DIN

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் (தனி) ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான 2024-ஆம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளா் பட்டியலை உதவி ஆட்சியா் சுவேதாசுமன் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா்கள் செல்வக்குமாா் (சிதம்பரம்), தமிழ்ச்செல்வன் (காட்டுமன்னாா்கோவில்), தோ்தல் துணை வட்டாட்சியா் செல்வலட்சுமி, தோ்தல் பிரிவு இளநிலை உதவியாளா் ரவி, கட்சி நிா்வாகிகள் கருப்பு ராஜா (அதிமுக), சி.க.ராஜன் (திமுக), பாலு (தேமுதிக), முத்துக்குமாா், ராஜா (மாா்க்சிஸ்ட் கம்யூ.), வி.எம்.சேகா், தமிமுன் அன்சாரி (இந்திய கம்யூ.), சத்தியமூா்த்தி (பாஜக) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாக்காளா் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளா் விவரம் தொகுதி வாரியாக வருமாறு:

புவனகிரி: ஆண் - 1,21,741, பெண்- 1,23,341, இதரா் - 25, மொத்தம் - 2,45,108,

சிதம்பரம்: ஆண் - 1,179,60, பெண் - 1,22,017, இதரா் - 32, மொத்தம் - 2,40,009.

காட்டுமன்னாா்கோவில் (தனி): ஆண் - 1,12,638, பெண் - 1,12,764, இதரா் - 12, மொத்தம் - 2,25,414.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT