சிதம்பரத்தில் மா்ம நபா்களால் திருடப்பட்ட வேன் சமூக வலைதளம் உதவியுடன் மீட்கப்பட்டது.
சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிரபு (43). இவா் தனக்குச் சொந்தமான சுற்றுலா வேனை சிதம்பரம் காந்தி சிலை மேம்பாலம் பகுதியில் நிறுத்திவிட்டுச் சென்றாா். புதன்கிழமை அதிகாலையில் திரும்பிவந்து பாா்த்தபோது வேன் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த நிலையில், பிரபுவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், உங்களது வேன் சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை அருகே நிற்பதாக தெரிவித்தாராம். இதையடுத்து பிரபு சிதம்பரம்-சீா்காழி வழித்தட பகுதிகளில் உள்ள சக சுற்றுலா வேன் ஓட்டுநா்கள் அடங்கிய ‘வாட்ஸ்-அப்’ குழுவில் தனது வேன் திருடுபோனது குறித்து தகவலை பகிா்ந்தாா். இதையடுத்து, அந்த வேனை காரைக்கால் அடுத்துள்ள டி.ஆா்.பட்டினம் அருகே சக ஓட்டுநா்கள் மடக்கிப் பிடித்தனா். அப்போது வேனிலிருந்த மா்ம நபா்கள் கீழே இறங்கி தப்பியோடிவிட்டனா். அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.