முகப்பு
கடலூர்

நாம் தமிழா் கட்சி நிா்வாகி நூதன பிரசாரம்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:50 PM
பகிர்:

நெய்வேலி, ஏப்.12: கடலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு கோரி, அக்கட்சியின் நிா்வாகி விருத்தாசலம் பகுதியில் நூதன முறையில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கடலூா் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில், வேட்பாளராக வே.மணிவாசகன் போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து அக்கட்சியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலா் கதிா்காமன் தலைமையில் நிா்வாகிகள் வாக்கு சேகரித்தனா். அப்போது, கதிா்காமன் தனது முதுகில் பிராண வாயு உருளையைபோல தண்ணீா் கேனை சுமந்து, புவி வெப்பமயமாதல், மரம் வளா்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியவாறு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தாா். நிா்வாகிகள் ஆனந்தி, ராஜேந்திரன், ஜெகநாதன், கொளஞ்சிநாதன், ராஜாராம், விக்னேஷ், ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments