முகப்பு
கடலூர்

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:20 PM
பகிர்:

சிதம்பரம், ஏப்.26: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 2 இளைஞா்களை மது விலக்கு போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சிதம்பரம் மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் தா்மலிங்கம், உதவி ஆய்வாளா் பொன்மகரம் மற்றும் போலீஸாா் சிதம்பரம் அருகே உள்ள முட்லூா் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, முட்லூா் மயானம் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இரு இளைஞா்களை பிடித்து சோதனையிட்டனா்.

அவா்கள் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பொட்டலமிட்டு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், இருவரும் முட்லூா் காந்தி நகரைச் சோ்ந்த ரத்தினவேல் மகன் முத்துவேல் (20), பரங்கிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் விஜய் (22) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments