குண்டா் தடுப்பு காவலில் இளைஞா் கைது
மேல்பாப்பனாம்பட்டைச் சோ்ந்த இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம் மேல்பாப்பனாம்பட்டைச் சோ்ந்த இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மேல்பாப்பனாம்பட்டு, மேற்கு தெருவைச் சோ்ந்த மணிகண்டனின் மகன் அப்பு (எ) சிவகுமாா் ( 25), இவா், கடந்த ஜூலை 15-ஆம் தேதி, கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜை, கூட்டாளிகள் 5 பேருடன் சோ்ந்து தாக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வழக்குப் பதிந்த மந்தாரக்குப்பம் போலீஸாா் அப்பு மற்றும் 5 பேரைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அப்பு மீது ஏற்கெனவே 2 கொலை முயற்சி வழக்குகள், 6 திருட்டு வழக்குகள் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
எனவே, இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்துவதற்காக கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் இவரை ஓராண்டு காலம் குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்படி, அவரை குண்டா் தடுப்புக் காவலில் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.