எம்ஏஎம் ராமசாமி படத்துக்கு மரியாதை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மூன்றாம் நிறுவனா் மறைந்த எம்.ஏ.எம். ராமசாமியின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மூன்றாம் நிறுவனா் மறைந்த எம்.ஏ.எம். ராமசாமியின் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் எம்.ஏ.எம்.ராமசாமி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் தி. அருட்செல்வி, பதிவாளா் எம். பிரகாஷ், ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் அரங்கபாரி, தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், தொலைதூரக் கல்வி மைய இயக்குநா் சீனுவாசன் உள்ளிட்டோா் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.