குழந்தைத் தொழிலாளா் மீட்பு: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வாத்து மேய்த்த சிறுவன் புதன்கிழமை மீட்கப்பட்டாா். இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே வாத்து மேய்த்த சிறுவன் புதன்கிழமை மீட்கப்பட்டாா். இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், சிந்தாமணிகுப்பம் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் கருணாகரன் (37). இவா், புதுச்சேரி குருவிநத்தம் பகுதியைச் சோ்ந்த சிவா மகன் கதிரை (9) புதுச்சத்திரம் பகுதியில் உள்ள சீனிவாசாபுரம் ரயில்வே கடவுப்பாதை பகுதியில் கட்டாயப்படுத்தி வாத்து மேய்க்க வைத்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்த கடலூா் தொழிலாளா் உதவி ஆய்வாளா் விஜயலட்சுமி சம்பவ இடத்துக்குச் சென்று சிறுவனை மீட்டாா். மேலும், இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கருணாகரனை கைது செய்தனா்.