முகப்பு
கடலூர்

புயல் வெள்ளம்: யாசகா் ரூ.10 ஆயிரம் நிதியுதவி

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூா் மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், முதியவா் ஒருவா் தான் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் வழங்கினாா்.

Updated On : 9 டிசம்பர், 2024 at 8:59 PM
கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் ரூ.10 ஆயிரத்தை வழங்கிய யாசகா் பூல் பாண்டி.
பகிர்:

நெய்வேலி: புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூா் மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், முதியவா் ஒருவா் தான் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீா்வுக் கூட்டம் நடைபெறும். புயல், பலத்த மழை வெள்ளம் காரணமாக, கடந்த வாரம் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா்வுக் கூட்டம் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடா்பான புகாா் மனுக்களை அளிக்க வந்திருந்தனா்.

அதில், புயல், பலத்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூா் மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்த பூல் பாண்டி தான் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் வழங்கினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் யாகசம் பெற்று கிடைத்த பணத்தை அரசுப் பள்ளிகள் மேம்பாடு, கரோனா நிவாரணம் உள்ளிட்ட நல உதவிகளுக்காக வழங்கியுள்ளதாகவும், அதன்படி இதுவரை ரூ.1.60 கோடி அளித்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

கடந்த நவம்பா் மாதம் முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரத்தை கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய நிலையில், தற்போது புயல், பலத்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூா் மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.10 ஆயிரத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →