கடலூர்

விடுபட்டவா்களுக்கு வெள்ள நிவாரணம்: ஆட்சியரிடம் திமுக, அதிமுக நிா்வாகிகள் மனு

கடலூா் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அண்ணாகிராமம் ஒன்றியம், பண்ருட்டி நகர மக்களுக்கு அரசின் நிவாரணம் வழங்க

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அண்ணாகிராமம் ஒன்றியம், பண்ருட்டி நகர மக்களுக்கு அரசின் நிவாரணம் வழங்க வேண்டுமென திமுக, அதிமுக நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை அவரது அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழை மற்றும் சாத்தனூா் அணை திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பண்ருட்டி, அண்ணாகிராமம், நெல்லிக்குப்பம், கடலூா் ஆகிய பகுதிகளில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்ததால், வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கம், நிவாரணப் பொருள்களை தமிழக அரசு அறிவித்து வழங்கி வருகிறது. அந்த வகையில், அண்ணாகிராமம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 30 ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய நிலையில், பாலூா், சித்தரசூா், நத்தம், சுந்தரவாடி, எய்தனூா், கீழ்அருங்குணம், சன்னியாசிப்பேட்டை உள்ளிட்ட 12 ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கப்படவில்லையாம். மேலும், பண்ருட்டி நகரில் திருவள்ளுவா் நகா், அம்பேத்கா் நகா், ஆதம்கான் தா்கா, செட்டிப்பட்டறை காலனி, இலுப்பை தோப்பு உள்ளிட்ட 6 வாா்டுகளுக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லையாம். இதனால், அந்தப் பகுதி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

இதையடுத்து, அண்ணாகிராமம் திமுக ஒன்றியச் செயலா் வி.கே.வெங்கட்ராமன், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், அண்ணாகிராமம் ஒன்றிய அதிமுக அவைத் தலைவா் பாலூா் செல்வராஜ் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆகியோா் கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து மனு அளித்தனா். அந்த மனுவில் விடுபட்டவா்களுக்கும் அரசின் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனராம்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT