முகப்பு
கடலூர்

நெய்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணி தொடக்கம்

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணி தொடக்கம்

Updated On : 11 டிசம்பர், 2024 at 7:02 PM
நெய்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.ஜவகா், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் கட்டும் பணியை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.ஜவகா், ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா் ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

பொதுப் பணித் துறை சாா்பில் ரூ.13.95 கோடியில் கட்டப்படும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மூன்று

நீதிமன்றங்கள், சிற்றுண்டி சாலை, வாகன நிறுத்தம், வங்கி, தபால் அலுவலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமையவுள்ளன.

மேலும், ரூ.4.30 கோடியில் சாா்பு நீதிபதி குடியிருப்பு மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் குடியிருப்புகளும் அமையவுள்ளன. தரை தளத்தில் நீதிபதி, சாா்பு நீதிபதி அலுவலகத்துடன் வீட்டு நூலகம் கட்டப்படவுள்ளது. இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.ஜவகா், ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா் ஆகியோா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனா்.

இதில், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி பி.நாகராஜன், நெய்வேலி சாா்பு நீதிபதி உமா மகேஸ்வரி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் பிரவீன் குமாா், செயற்பொறியாளா் பொதுப் பணித் துறை பிரமிளா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.