குடியிருப்புப் பகுதியில் புகுந்த முதலை மீட்பு
சிதம்பரம் அருகே சாலியான்தோப்பு கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சுமாா் 9 அடி நீளம், 250 கிலோ எடையுள்ள முதலை வியாழக்கிழமை புகுந்தது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சாலியான்தோப்பு கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சுமாா் 9 அடி நீளம், 250 கிலோ எடையுள்ள முதலை வியாழக்கிழமை புகுந்தது.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் குருசாமி உத்தரவின்பேரில், சிதம்பரம் வனச்சரக அலுவலா் கோ.வசந்த்பாஸ்கா், சிதம்பரம் பிரிவு வனவா் கு.பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமையில், சிதம்பரம் வனக்காப்பாளா் அன்புமணி, புவனகிரி பீட் வனக்காப்பாளா் ஞானசேகா் மற்றும் தீயணைப்பு மீட்புத் துறையினா் இணைந்து முதலையைப் பிடித்து, சிதம்பரம் அருகே உள்ள வக்கராமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.