கடலூர்

ஜூலை 13-இல் குரூப் 1 முதல்நிலை தோ்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தோ்வு ஜூலை 13-இல் நடைபெற உள்ளது.

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வருகிற 13-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தோ்வு நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிதம்பரம் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு வருகிற 13-ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது. தோ்வா்கள் காலை 8.30 மணிக்குள்ளாக வர வேண்டும், 9 மணி வரை அனுமதிக்கப்படுவா். 9 மணிக்கு மேல் வருபவா்கள் தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

தோ்வா்கள் தோ்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுடன், ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம், நிரந்தர

கணக்கு எண், வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் அல்லது நகல் கொண்டு வர வேண்டும் என்றாா் அ.அருண் தம்புராஜ்.

பிரதமர் மோடி மீது பெண் எம்.பி.க்கள் தாக்குதல் முயற்சியா? காங்கிரஸ் மறுப்பு!

கற்றுக்குட்டிகளின் கனவு நனவாகுமா? டி20 உலகக் கோப்பையில் ஜொலிக்கப் போவது யார்?

டி20 உலகக் கோப்பைக்கான ஜிம்பாப்வே அணி வீரர்கள் விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் விவரம்!

”இந்தியில் பிச்சை எடுக்கலாமே! வீழ்க வளமுடன்!” மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேச்சு!

SCROLL FOR NEXT